நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியா – நேபாள உறவுகள் மீதான புகழ்பெற்ற நபர்களுடைய குழுவின் (Eminent persons Group- EPG) ஏழாவது சந்திப்பு அண்மையில் நடந்தது.
இரு நாடுகளுக்கிடையேயான 1950 ஆம் ஆண்டின் அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் மீதும், வர்த்தகம், எல்லைப்பிரச்சனை, சுற்றுச்சூழல் மற்றும் அவற்றினை தீர்ப்பதற்கான வழிமுறைகள் மீதும் இந்த இரு நாள் சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்தக்குழு இந்தியா மற்றும் நேபாளத்தினைச் சேர்ந்த அறிவு ஜீவிகள் (Intellectuals) மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஓர் கூட்டுப் பேச்சுவார்த்தைக்கான புகழ்பெற்ற நபர்களுடைய குழுவாகும்.
நடப்பில் இரு நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக 2016 ஆம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் அடுத்த சந்திப்பு புதுதில்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.