TNPSC Thervupettagam
June 20 , 2018 2349 days 782 0
  • அஹமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் (Physical Research Laboratory-PRL) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சூரியன் போலான ஓர் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்ற தொலைதூரக் கோள் ஒன்றை  முதன் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த  கோள் மற்றும் நட்சத்திரம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து  EPIC எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  • இந்த EPIC கோளானது பூமியைக் காட்டிலும் ஆறு மடங்கு பெரியதானதாகும். மேலும் பூமியின் நிறையைக் காட்டிலும் 27 மடங்கு நிறையுடையதாகும். மேலும் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் தன்னுடைய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.
  • சனி கோளை ஒப்பிடுகையில் EPIC கோளானது மிகவும் சிறிய கோளாகும்.  ஆனால் நெப்டியூன் கோளைக் காட்டிலும் பெரிய கோளாகும்.
  • இதன் 60 சதவீத நிறையானது பனி, சிலிக்கேட்டுகள் மற்றும் இரும்பு போன்ற கனத் தனிமக் கூறுகளினால் உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்தக் கோளானது வசிப்பதற்கு சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் இதன் உயர் புறப்பரப்பு வெப்பநிலை 600° செல்சியஸாகும்.
  • EPIC கோளானது சூரியன் போலான ஓர் நட்சத்திரத்தை வெகு அண்மையில் சுற்றிவரும் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு5 நாளிற்கு ஒருமுறை இக்கோள் தன் நட்சத்திரத்தைச்  சுற்றி வருகின்றது.
  • இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இக்கண்டுபிடிப்பிற்கு  மத்திய விண்வெளித் துறை  வெகுவாக  ஆதரவளித்தது. ISRO அமைப்பானது இத்துறையின் முக்கியப் பிரிவாகும்.
  • குறிப்பாக, இக்கண்டுபிடிப்பானது இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால், வடிவமைக்கப்பட்ட PARAS  எனும் நிறமாலை வரைவியின் (spectrograph) பயன்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • PARAS நிறமாலை வரைவியானது புதிய கோள்களின் நிறையை அளவிடவும், அவற்றை உறுதிப்படுத்தவும்  பயன்படுகின்றது.
  • PARAS நிறமாலை வரைவியானது நட்சத்திரங்களை சுற்றிவருகின்ற கோள்களின் நிறையை அளவிட வல்ல நாட்டின் முதல் வகையான நிறமாலை வரைவியாகும்.
  • இந்த நிறமாலை வரைவியானது ராஜஸ்தான் மாநிலத்தின் மவுண்ட் அபுவில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின்  குருஷிகார் நோக்ககத்தில் (Gurushikhar Observatory)  உள்ள2 மீட்டர் தொலைநோக்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்