TNPSC Thervupettagam
February 6 , 2024 164 days 198 0
  • அறிவியலாளர்கள் பேரண்டத்தின் மிகப்பெரிய ஊடுகதிர் வரைபடத்தை வெளியிட்டு உள்ளதோடு 9,00,000 உயர் ஆற்றல் கொண்ட விண்வெளி (அண்டம்) மூலங்களையும் கண்டறிந்துள்ளனர்.
  • ஸ்பெக்ட்ரம்-RG எனப்படும் ரஷ்ய-ஜெர்மன் செயற்கைக் கோளில் உள்ள eROSITA ஊடு கதிர் தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்பட்டத் தரவுகளை ஜெர்மனி நாட்டின் "ஈரோசிட்டா" கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
  • முதலாவது eROSITA வானியல் ஆய்வுப் பட்டியல் தொகுப்பு (eRASS1) ஆனது இது வரையில் வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஊடுகதிர் மூலங்களின் தொகுப்பாகும்.
  • தொலைதூர அண்டங்களில் சுமார் 7,10,000 மீப்பெரும் கருந்துளைகள் உள்ளன.
  • உயர் ஆற்றல் கொண்ட அண்ட மூலங்கள் (900,000க்கும் அதிகமானவை) ஊடு கதிர்களை வெளியிடும் 180,000 நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • இது தவிர, 12,000 அண்டத் தொகுப்புகள் மற்றும் பிற வெளிப்புற அமைப்புகளைச் சேர்ந்த ஊடுகதிர் வெளியிடும் வானியல் பொருட்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்