TNPSC Thervupettagam

ERSS - 112 மற்றும் பிரகார் குற்றத் தடுப்பு வாகனங்கள் – தில்லி

October 1 , 2019 1757 days 657 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது தில்லியில் அவசர காலப் பதிலெதிர்ப்பு ஆதரவு அமைப்பின் (Emergency Response Support System  / ERSS -112) உதவி எண் மற்றும் பிரகார் (PRAKHAR) என்ற தெருவோர குற்றத் தடுப்பு ரோந்து வாகனங்கள் ஆகியவற்றை தில்லியி ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • காவல் துறை, தீயணைப்பு மற்றும் அவசர கால ஊர்தி போன்ற அவசர சேவைகளுக்காக, நாடு தழுவிய, ஒற்றை அவசர எண்ணாக ERSS - 112 என்ற உதவி எண் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இது இதர மூன்று அவசர கால உதவி எண்களைப் படிப்படியாக  நீக்க இருக்கின்றது.
  • அவசர கால சேவைகளுக்கான இந்த ஒற்றை எண்ணானது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள “112” என்ற எண் மற்றும் அமெரிக்காவில் உள்ள “911” என்ற எண் ஆகியவற்றைப் போன்றது.
  • ERSS - 112ஐ ஏற்றுக்  கொண்ட 19வது மாநிலம் / ஒன்றியப் பிரதேசமாக புது தில்லி உருவெடுத்துள்ளது.
  • பிரகார் என்பது, குற்றம் நிகழும் முக்கியமான இடங்களில் ரோந்து செல்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தெருவோர குற்றத் தடுப்பு ரோந்து வாகனமாகும்.
  • பிரகார் வாகனங்கள் வழக்கமான ரோந்து வாகனங்களிலிருந்து வேறுபடுகின்றன. ஏனெனில் இந்த வாகனங்கள் அதிக ஆயுதங்களைக் கொண்டு செல்கின்றன. மேலும் இவை நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்