தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) ஆனது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று eShram இணைய தளத்தினைத் தொடங்கியது.
தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், 30 கோடிக்கும் அதிகமான அமைப்புசாராத் தொழிலாளர்கள் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தளம் ஆனது, நாட்டின் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான "ஒற்றை தீர்வு அமைப்பாக" தொடங்கப்பட்டது.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காக பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவர்கள் அணுகச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் எந்த தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வசதியாக இது செயல்படுகிறது.