ESPN இந்தியா பல்துறை விளையாட்டு விருதுகளில் இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீராங்கனையாக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான PV சிந்துவும் சிறந்த விளையாட்டு வீரராக ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் இவர்கள் நிகழ்த்திய சாதனைகளுக்காக இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் அணியின் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணா என்பவர் “ஆண்டிற்கானப் பயிற்சியாளர் விருதையும்” 2012 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவரான சாய்னா நேவால் ஆண்டின் “மீண்டு வருவோருக்கான விருதையும்” வென்றுள்ளனர்.