TNPSC Thervupettagam

ETO கலப்பினைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்

May 16 , 2024 195 days 218 0
  • சமீபத்தில், சில நிறுவனங்களின் தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு என்ற இரசாயனம் இருப்பதைக் கண்டறிந்ததையடுத்து பிரபலத் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தடை செய்தன.
  • இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பொருட்களில் உள்ள எத்திலீன் ஆக்சைடு (EtO) கலப்பினைத் தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை ஏற்றுமதியாளர்களுக்கு மசாலா வாரியம் வெளியிட்டுள்ளது.
  • பதப்படுத்துதல் செயல்முறையின் அனைத்து நிலைகளிலும் சாத்தியமான மாசுபட்டப் பொருட்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதன் மூலம் மசாலா மற்றும் மூலிகைப் பொருட்கள் மாசுபடுவதைத் தடுப்பதற்காகத் திறன் மிகு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
  • நீராவி மூலமான கிருமி நீக்கம்; கதிர்வீச்சுப் பதனம் போன்ற மாற்றுக் கிருமி நீக்க முறைகளைப் பயன்படுத்த இதன் மூலம் ஊக்குவிக்கப் படுகின்றது.
  • 2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவின் மசாலா ஏற்றுமதியானது சுமார் 4.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்பதோடு இது உலகளாவிய மசாலா ஏற்றுமதியில் 12 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது.
  • உலக மசாலா வர்த்தகம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியுடன் சீனா முதன்மையான ஏற்றுமதியாளராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்