தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL) ஆனது, 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய (ETPS) விரிவாக்கத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்தத் திட்டத்தினைப் பொது தனியார் கூட்டாண்மை (PPP) மூலமாக செயல்படுத்த முன்மொழியப்பட்டது.
TNPGCL கழகத்தின் அனல் மின் உற்பத்தி திறன் ஆனது 4,320 மெகாவாட் ஆகும்.
மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் (CGS) மற்றும் பிற ஒப்பந்தங்களிலிருந்து நமது மாநிலத்தின் பங்கையும் சேர்த்து, தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் 15,839.56 மெகாவாட் ஆகும்.