TNPSC Thervupettagam
December 18 , 2024 31 days 141 0
  • தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவரும், ஈரோடு (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S. இளங்கோவன் காலமானார்.
  • 1984 ஆம் ஆண்டில் சத்திய மங்கலம் தொகுதியிலும், 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும் இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004 ஆம் ஆண்டில், தான் பங்கெடுத்த முதல் மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப் பாளையம் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
  • இவர் மத்தியப் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வணிகத்துறையின் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • அவர் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்