தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவரும், ஈரோடு (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S. இளங்கோவன் காலமானார்.
1984 ஆம் ஆண்டில் சத்திய மங்கலம் தொகுதியிலும், 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும் இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டில், தான் பங்கெடுத்த முதல் மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப் பாளையம் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
இவர் மத்தியப் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வணிகத்துறையின் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.