TNPSC Thervupettagam

EVM தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

May 2 , 2024 209 days 265 0
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) தரவுகளை வாக்காளர் சரிபார்க்கக் கூடிய காகிதத் தணிக்கைச் சோதனை (VVPAT) பதிவுகளுடன் கூடிய முழுமையான மறு சரிபார்ப்பு முறையினை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
  • மேலும், காகித வாக்குச் சீட்டுகள் மூலமான முந்தைய தேர்தல் முறையினைப் பயன்படுத்தும் நடைமுறைக்கு மாற உத்தரவிடவும் மறுப்பு தெரிவித்துள்ளது.
  • தற்போது 5% EVM-VVPAT எண்ணிக்கைகள் மட்டுமே எந்தவொரு சட்டமன்றத் தொகுதியிலும் தோராயமாக சரிபார்க்கப் படுகின்றன.
  • தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகங்கள் உள்ள வேட்பாளர்களுக்கு மட்டும் புதிய சரி பார்ப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
  • இயந்திரங்களில் உள்ள தரவை 45 நாட்களுக்குப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் மறு சரிபார்ப்புக்கான செயல்முறை ஆகியவை தேர்தல் செயல்முறையினை வலுப்படுத்தும் என்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் என்றும் கருதப் படுகிறது.
  • கட்சிகளுக்கென்று பிரத்தியேக பட்டைக் குறியீடுகளை (QR) உருவாக்குவதற்கான ஒரு ஆலோசனையையும் இது வழங்கியது.

​​​​​​​

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்