சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தொழில் காப்பு பெற்ற ePlane நிறுவனம் ஆனது, பெங்களூரில் eVTOL (மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தான புறப்பாடு மற்றும் தரையிறக்கம்) வசதி கொண்ட விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
eVTOL விமானங்கள் நகர்ப்புறங்களில் செயல்படுவதற்காகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், இணைப்பு மற்றும் அவசர சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை மின்சார உந்து விசையைப் பயன்படுத்தி மிகவும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கக் கூடிய விமானங்கள் ஆகும்.
தினசரி பயணத்தில் சாலைப் போக்குவரத்தை குறைக்கும் என்றும் சரக்கு விநியோகம் மற்றும் ராணுவப் பயன்பாடுகளுக்காக கூட இது பயன்படுத்தப்படும் என்றும் மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது.