மின்சாரச் செங்குத்து பறக்குதல் மற்றும் தரையிறங்குதல்(eVTOL) வகை விமானங்களை மேம்படுத்தும் ஒரு நிறுவனமான ePlane நிறுவனம் பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் ஆரம்பிக்கப் பட்டுள்ள ePlane நிறுவனம் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி என்பவரால் நிறுவப் பட்டது.
ePlane நிறுவனம் இந்தியாவின் முதல் சிறிய பறக்கும் மின்சார டாக்ஸியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது நகரங்களுக்குள் பயணிக்கவும் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்காகவும் வேண்டி வடிவமைக்கப் பட்டு ள்ளது.
நகர்ப்புறங்களில் இயக்கப் படுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ePlane e200 என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமானமாகும்.