TNPSC Thervupettagam
November 30 , 2022 600 days 308 0
  • 2022 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு (EXCELL) திட்டங்களில் முன்னிலை விருதுகளைப் பெற்ற ஒரே நாடு இந்தியா ஆகும்.
  • குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் 'நாடுகள் பிரிவில்' இந்தியா விருதினைப் பெற்றது.
  • இந்த விருதானது, சரியான தகவல் மற்றும் நம்பகமான சேவைகளின் அடிப்படையில் தரமான குடும்பக் கட்டுப்பாடு தேர்வுகளுக்கான (வசதிகள்) அணுகலை உறுதி செய்வதற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.
  • அந்த வசதிகளின் அணுகலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவலறிந்தத் தேர்வுகளை (வசதிகளை) மேற்கொள்ளச் செய்யும் நவீனக் கருத்தடை முறைகளையும் பின்பற்றுவதிலும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்