TNPSC Thervupettagam
February 18 , 2025 4 days 83 0
  • குறைந்தது மூன்று வகையான பெர் மற்றும் பாலிஃப்ளூரோ அல்கைல் பொருட்களை (PFAS) உடைத்து அதனை நன்கு சிதைக்கும் திறன் கொண்ட பாக்டீரியாக்களின் ஒரு வகையை ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.
  • குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் திரிபு ஆனது, அதனைச் சிதைக்கும் செயல்பாட்டின் போது உற்பத்தி செய்யப்படும் சில நச்சுத் தன்மை வாய்ந்த தயாரிப்புகளையும் நன்கு சிதைக்கும் தன்மை கொண்டது.
  • லேப்ரிஸ் போர்ச்சுகலென்சிஸ் F11 (F11) என்ற இப்பாக்டீரியம் ஆனது 100 நாட்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெர்ஃப்ளூரோக்டேன் சல்போனிக் அமிலத்தை (PFOS) வளர் சிதை மாற்றத்திற்கு உட்படுத்தியது.
  • PFOS என்பது மிகவும் பரவலான மற்றும் நிலையான PFAS சேர்மங்களில் ஒன்றாகும் என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தினால் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டது.
  • F11 பாக்டீரியாக்கள் முதலில் போர்ச்சுகலின் மிக மாசுபட்ட தொழில்துறை பகுதியின் மண்ணிலிருந்து பிரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்