கனரகத் தொழில் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கனரகத் தொழில் துறையானது ஃபேம் இந்தியா (FAME - Faster Adoption and Manufacturing of (Hybrid) and Electric Vehicles) திட்டத்தின் இரண்டாம் நிலையின் கீழ் 2636 மின்சார வாகன மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஃபேம் இந்தியா என்பது கலப்பு & மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அவற்றை துரிதமாக ஏற்றுக் கொள்ளுதல் என்பதாகும்.
சலுகைகளை வழங்குவதன் மூலம் மின்சார மற்றும் கலப்பின வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மூன்று மின்னேற்றுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
CHAdeMO அமைப்பு, இந்திய பாரத் தர அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மின்னேற்று அமைப்பு (CCS - Combined Charging System) ஆகிய மூன்றும் இதில் அடங்கும்.
CHAdeMO என்பது ஒரு விரைவான மின்னேற்று முறையாகும்.
CCS ஆனது நேர் மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம் ஆகிய இரண்டு மின்னேற்றத்தையும் உள்ளடக்கியுள்ளது.