TNPSC Thervupettagam
January 4 , 2020 1661 days 752 0
  • கனரகத் தொழில் துறை மற்றும் பொதுத் துறை  நிறுவனங்கள்  அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கனரகத் தொழில் துறையானது ஃபேம் இந்தியா (FAME - Faster Adoption and Manufacturing of (Hybrid) and Electric Vehicles) திட்டத்தின் இரண்டாம் நிலையின் கீழ் 2636 மின்சார வாகன மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • ஃபேம் இந்தியா என்பது கலப்பு & மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அவற்றை துரிதமாக ஏற்றுக் கொள்ளுதல் என்பதாகும்.
  • சலுகைகளை வழங்குவதன் மூலம் மின்சார மற்றும் கலப்பின வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • மூன்று மின்னேற்றுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • CHAdeMO அமைப்பு, இந்திய பாரத் தர அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மின்னேற்று அமைப்பு (CCS - Combined Charging System) ஆகிய மூன்றும் இதில் அடங்கும்.
  • CHAdeMO என்பது ஒரு விரைவான மின்னேற்று முறையாகும்.
  • CCS ஆனது நேர் மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம் ஆகிய இரண்டு மின்னேற்றத்தையும் உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்