TNPSC Thervupettagam

FAME இந்தியா - II

August 29 , 2018 2285 days 692 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மின் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக சலுகை அளிக்கும் திட்டமான FAME இந்தியா திட்டத்தை செப்டம்பர் 7 அன்று தொடங்கி வைக்கிறார்.
  • புது தில்லியில் நடத்தப்படவிருக்கும் உலக இயக்க மாநாடான ‘மூவ்’ (MOVE) மாநாட்டின் தொடக்க அமர்வின் போது இத்திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.
  • இத்திட்டத்தின் முதல் பகுதி ஆரம்ப நிலையில் 2 வருடங்களுக்கு (அதாவது 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை) முன்மொழியப்பட்டது. ஆனால் இதன் காலம் 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • FAME இந்தியா திட்டத்தின் விரிவாக்கம்: மின் வாகனங்களை (கலப்பு) வேகமாக ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் தயாரித்தல் (Faster Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles - FAME).
  • நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஊக்குவிப்பதற்காக தேசிய மின் இயக்கத் திட்டத்தின் கீழ் (NEMM – National Electric Mobility Mission) 2015 ஆம் ஆண்டில் FAME தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை கனரக தொழிற்சாலை அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்