மத்திய அரசின் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுடன் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (UN body Food and Agriculture Organization- FAO) இணைந்து விவசாயத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது மத்தியப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.
பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளை பாதுகாப்பதன் மூலம் வேளாண் துறையில் மாற்றுருவாக்கத்தை கொண்டு வருவதற்கு இது முற்படுகிறது.
உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியிலிருந்து (GEF – Global Environment Facility) 33.5 மில்லியன் டாலர் மானியத்தால் இந்த திட்டம் நிதியளிக்கப்படுகிறது.