TNPSC Thervupettagam
October 14 , 2018 2238 days 869 0
  • வடகிழக்கு மாநிலமான சிக்கிமானது உலகின் 100% இயற்கை வேளாண் மாநிலமாக திகழ்வதால் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO - Food and Agriculture Organization) எதிர்கால கொள்கை விருது 2018-ஐ வென்றுள்ளது.
  • சிக்கிமானது 25 நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 51 கொள்கைகளை தோற்கடித்து ‘சிறந்த கொள்கைகளுக்கான ஆஸ்கார்’ என அழைக்கப்படும் எதிர்கால கொள்கை விருது 2018-ன் தங்கப் பரிசை வென்றுள்ளது.
  • 2015-ல் சிக்கிம் ஆனது உலகின் முதல் இயற்கை வேளாண் மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த வருட விருதானது கீழ்க்காண்பனவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO)
    • உலக எதிர்கால சபை (WFC - World Future Council) மற்றும்
    • ஆர்கானிக் இன்டர்நேஷனல் - IFOAM

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்