ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றினால் இந்தப் புதிய அறிக்கை வெளியிடப் பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பட்டினி நிலை அதிகம் நிலவும் 18 பகுதிகளில் காணப்படும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும்.
இப்பகுதிகள் இரண்டு பிராந்தியத் தொகுப்புகள் உட்பட 22 நாடுகள் அல்லது பிரதேசங்களை உள்ளடக்கியது.
ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, ஹைதி, பாகிஸ்தான், சோமாலியா, சிரிய அரபுக் குடியரசு மற்றும் ஏமன் ஆகியவை பாதிப்புள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளப் பகுதிகளாக இந்த அறிக்கையில் அடையாளம் காணப் பட்டு உள்ளன.