வேளாண்மையில் வேதிப்பொருட்கள் பயன்பாட்டினைக் குறைத்தலுக்கு நிதியளித்தல் மற்றும் மேலாண்மைத் திட்டம் (FARM) என்பது வேளாண்மையில் வேதிப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான 379 மில்லியன் டாலர் மதிப்பிலான முன்னெடுப்பாகும்.
இதற்கு உலக சுற்றுச்சூழல் நிதியம் மூலம் நிதியளிக்கப்படுகிறது என்பதோடு இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு தலைமை தாங்குகிறது.
வங்கிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் கொள்கை மற்றும் நிதி ஆதாரங்களை மறுசீரமைப்பதற்காக வேண்டி இது வணிக நடவடிக்கையினை விரிவுபடுத்துகிறது.
இந்த வளங்கள், நச்சுத்தன்மை கொண்ட வேளாண் பயன்பாட்டு இரசாயனங்களுக்கு மாற்றாக குறைந்த மற்றும் இரசாயனமற்ற மாற்றுகளைப் பயன்படுத்தவும், சிறந்த நடைமுறைகளை நோக்கிய மாற்றத்தை மேற்கொள்ளவும் உதவும்.
இந்த ஐந்தாண்டுத் திட்டமானது 51,000 டன் அளவிலான அபாயகரமான பூச்சிக் கொல்லிகள் மற்றும் 20,000 டன் அளவிலான நெகிழிக் கழிவுகள் உருவாவதைத் தடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது 35,000 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைத் தவிர்க்கும்.
பண்ணைகள் மற்றும் விவசாயிகள் இரசாயனக் கூறுகள் குறைவாக உள்ள மற்றும் இரசாயனமற்ற மாற்றுகளுக்கு மாறுவதால், இது 3 மில்லியன் ஹெக்டேர் நிலத்தைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
உலக சுற்றுச்சூழல் நிதியம் (GEF) என்பது பல்லுயிர் இழப்பு, பருவநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் நிலம் மற்றும் கடல் வளத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றினை எதிர்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலதரப்பு நிதியாகும்.