TNPSC Thervupettagam
November 5 , 2017 2447 days 857 0
  • நெரிசலை குறைத்து போக்குவரத்தை விரைவுப் படுத்துவதற்காகவும், குறிப்பாக கட்டணச் சாவடிகளில் போக்குவரத்தை விரைவுப் படுத்துவதற்காகவும், டிசம்பர் 1க்கு பிறகு சந்தையிடப்படும் அனைத்து வாகனங்களிலும் FASTags ஐ கட்டாயமாகப் பொருத்த அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.
  • டிசம்பர் 1, 2017 அன்று அல்லது அதன் பிறகு விற்பனை செய்யப்படும் வாகனங்களில் FASTags பொருத்துதலை கட்டாயமாக்க மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தங்கள் அண்மையில் கொண்டு வரப்பட்டன.
  • FASTags என்பது கட்டணச் சாவடிகளில் நேரடியாக கட்டணம் செலுத்த, கட்டணத் தொகைகள் முன் செலுத்தப்பட்ட கணக்குகளோடு (Prepaid Account) இணைக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் அடையாளப்படுத்தும் தொழிற்நுட்பத்தை (RFID – Radio Frequence Identification) பயன்படுத்தும் ஓர் கட்டண வசூலிப்புச் சாதனமாகும்.
  • இவை வாகனங்களின் கண்ணாடிப் பகுதிகளில் பொருத்தப்படும். இதன் மூலம் தானியங்கு முறையில் சாவடிக் கட்டணம் செலுத்தப்படுவதால் சுங்கச் சாவடி வழியே வண்டிகள் நிற்காமல் பயணிக்கலாம்.
  • FASTags ஐ வாங்கவும், மீள் நிரப்பம் (Recharage) செய்யவும், பொது வாடிக்கையாளர்களுக்கு “My FASTags” எனும் வணிகச் செயலியும், “FASTags Partner” எனும் வணிகர்களுக்கான செயலியும் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்