நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) ஆனது, சர்வதேச நிதி அமைப்புக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் நாடுகளின் மீது கவனம் செலுத்துவதற்கான பல்வேறு அளவுருக்களில் (நிபந்தனைகளில்) பெரிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது.
FATF அமைப்பானது, பணமோசடி, தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் ஆயுதப் பரவலுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நாடுகளின் விதிமுறை கட்டமைப்பில் உத்தி சார் குறைபாடுகளுடன் கூடிய நாடுகளை அடையாளம் காட்டுகிறது.
திருத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ், உலக நாடுகள் பரிந்துரை செய்யப்பட்ட பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவற்றின் தொடர் மதிப்பாய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவையாவன:
FATF அமைப்பின் உறுப்பினர் நாடு;
உலக வங்கியின் உயர் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ள நாடு (இரண்டு அல்லது அதற்கும் குறைவான வங்கிகளின் நிதித் துறையைத் தவிர்த்து); அல்லது
10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (பரந்த பணத்தால் அளவிடப்படும்) நிதித் துறை சொத்துகளைக் கொண்ட நாடு.
சுமார் 21 நாடுகள் ஆனது தற்போது FATF அமைப்பின் சாம்பல் நிறப் பட்டியலில் உள்ளன.