TNPSC Thervupettagam

FATF அமைப்பின் சாம்பல் நிறப் பட்டியல் விதிகள்

October 24 , 2024 30 days 79 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) ஆனது, சர்வதேச நிதி அமைப்புக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் நாடுகளின் மீது கவனம் செலுத்துவதற்கான பல்வேறு அளவுருக்களில் (நிபந்தனைகளில்) பெரிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது.
  • FATF அமைப்பானது, பணமோசடி, தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் ஆயுதப் பரவலுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நாடுகளின் விதிமுறை கட்டமைப்பில் உத்தி சார் குறைபாடுகளுடன் கூடிய நாடுகளை அடையாளம் காட்டுகிறது.
  • திருத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ், உலக நாடுகள் பரிந்துரை செய்யப்பட்ட பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவற்றின் தொடர் மதிப்பாய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவையாவன:
    • FATF அமைப்பின் உறுப்பினர் நாடு;
    • உலக வங்கியின் உயர் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ள நாடு (இரண்டு அல்லது அதற்கும் குறைவான வங்கிகளின் நிதித் துறையைத் தவிர்த்து); அல்லது
    • 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (பரந்த பணத்தால் அளவிடப்படும்) நிதித் துறை சொத்துகளைக் கொண்ட நாடு.
  • சுமார் 21 நாடுகள் ஆனது தற்போது FATF அமைப்பின் சாம்பல் நிறப் பட்டியலில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்