TNPSC Thervupettagam

FATF-ன் உறுப்பினரானது இஸ்ரேல்

December 17 , 2018 2172 days 682 0
  • இஸ்ரேல் நாடானது சமீபத்தில் நிதிநிலை செயல்பாட்டுப் பணிப் படையின் (Financial Action Task Force -FATF) முழுமையான உறுப்பினராகியுள்ளது.
  • இது சர்வதேச நிதி அமைப்பிற்கு பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் மற்ற அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு எதிராக போரிடும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இஸ்ரேலானது 2016 பிப்ரவரியில் FATF-ல் ஒரு பார்வையாளர் நாடாக இணைந்தது.
  • இஸ்ரேலானது முன்னதாக 2000 ஆம் ஆண்டில் இந்த அமைப்பால் தடை செய்யப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு தற்போது இக்குழுவின் 38-வது உறுப்பினராக ஆகியுள்ளது.
  • இஸ்ரேலின் மீதான FATF உடன்பாட்டு அறிக்கையானது இஸ்ரேலின் திறன் வாய்ந்த FATF நடவடிக்கைகளின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இணையாக முதல் 3 முக்கிய நாடுகளின் இடத்தில் இஸ்ரேலை தரவரிசைப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்