ஐக்கிய அரபு அமீரகமானது நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பார்படாஸ், ஜிப்ரால்டர் மற்றும் உகாண்டா ஆகியவை சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளன என்பதோடு, கென்யா மற்றும் நமீபியா ஆகியவையும் அந்தப் பட்டியலில் இடம் சேர்க்கப்பட்டுள்ளன.
FATF என்பது தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் சர்வதேச நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக பல்வேறு சர்வதேச தரநிலைகளை நிர்ணயிக்கின்ற ஓர் அரசுகளுக்கு இடையேயான அமைப்பாகும்.
FATF அமைப்பானது 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாரீஸ் நகரில் நடைபெற்ற G-7 உச்சி மாநாட்டின் மூலம் நிறுவப்பட்டது.
இதன் முதன்மை நோக்கமானது ஆரம்பத்தில் பணமோசடியை எதிர்த்துப் போராடச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்துவதாகும்.
இந்தியா 2010 ஆம் ஆண்டு முதல் FATF அமைப்பில் உறுப்பினராக உள்ளது.