TNPSC Thervupettagam
March 4 , 2018 2330 days 837 0
  • பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிதியியல் செயற்படைப் பிரிவின்(Financial Action Task Force - FATF) துணைத் தலைவராக  சீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • பணமோசடி(Money Laundering)  மற்றும்   பயங்கரவாத நிதியளிப்பு (Terror financing) போன்றவற்றை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய அமைப்பே FATF ஆகும்.
  • பாரிஸில் நடைபெற்ற FATF-ன் பொதுக்குழு கூட்டத்தில் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு தடுப்பு ஒழுங்குமுறைகளுடன் ஒத்திசைவதற்காக 2018 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரை பாகிஸ்தானின் செயல்பாடுகளை சர்வதேச ஒத்துழைப்பு மதிப்பீட்டுக் குழுவின் மூலம் கண்காணிக்க பாகிஸ்தான் FATF-ன் “Grey list”-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இருப்பினும் “grey list” பட்டியலில் பாகிஸ்தானை சேர்ப்பதற்கு சவூதி அரேபியா, துருக்கி, சீனா ஆகியவை ஓர் அணியாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
  • FATF பிரிவினுடைய விதிகளின்படி ஒரு நாட்டை “grey list” -இல் பட்டியலிடாமல் தடுப்பதற்கு FATF-ன் 37 உறுப்பினர்களில் மூவருடைய வாக்குகள் தேவை.

நிதியியல் செயற்படை பிரிவு (Financial Action Task Force - FATF) 

  • 1989 ஆம் ஆண்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பாக )Inter-governmental body) FATF தோற்றுவிக்கப்பட்டது.
  • பாரிஸில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில் (OECD - Organisation for Economic Co-operation and development)   FATF-ன்செயலகம் அமைந்துள்ளது.
  • FATF-ல் இந்தியா உட்பட மொத்தம் 37 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • FATF-ன் பொதுக்குழு  அவையானது (FATE Plenary Session) FATF-ன் முடிவெடுக்கும் அமைப்பாகும்.
  • ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் FATF-ன் பொதுக்குழு சந்திப்பு நடைபெறும்.
  • பெருகிவரும் பண மோசடி பிரச்சினைகளை எதிர்ப்பதற்காகவும், பயங்கரவாத  நிதியளிப்பு மற்றும் பண மோசடிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச தரநிலைகளை உருவாக்குவதற்காகவும் 1989 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற G-7 மாநாட்டின் போது FATF தோற்றுவிக்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்