இந்திய ரிசர்வ் வங்கியானது, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து, 1999 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தற்போதைய விதிமுறைகளை மறு மதிப்பாய்வு செய்துள்ளது.
இது ரூபாய் மதிப்பில் மற்றும் பிற உள்நாட்டு அல்லது தேசிய நாணயங்களின் மதிப்பில் பன்னாட்டுப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட இடையீட்டு/தரக வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகள் தற்போது இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் வசிப்பவர்களுக்கு இந்திய ரூபாய் மீதான மதிப்பிலான கணக்குகளைத் தொடங்க இயலும்.
இந்தியாவில் வசிப்பவர்களுடன் அனுமதிக்கப்பட்ட அனைத்து நடப்பு மற்றும் மூலதனக் கணக்குப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள இது உதவுகிறது.
இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் வசிப்பவர்கள் தாங்கள் திருப்பி அனுப்பக் கூடிய ரூபாய் மதிப்பிலான கணக்குகளில் உள்ள கை இருப்புகளைப் பயன்படுத்தி, பிற வெளிநாட்டு நபர்களுடனான சட்டப்பூர்வப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் வசிப்பவர்கள் தாங்கள் திருப்பி அனுப்பக் கூடிய ரூபாய் மதிப்பிலான இந்தக் கணக்கு நிலுவைகளை கடன் சாராத அம்சங்களில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பயன்படுத்தலாம்.
இதன்படி இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போது வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் தொடங்கி வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், ஏற்றுமதி வருமானத்தைப் பெறவும், இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.