தொழிலக அமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்பானது (FICCI) தனது அமைப்பின் தலைமை இயக்குநராக திலீப் செனாயை நியமித்துள்ளது.
முன்னதாக இவர் தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் (Siam) தலைமை இயக்குநராகவும் இந்தியத் தொழிலக கூட்டமைப்பின் (CII) துணைத் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியவர் ஆவார்.
2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்திலிருந்து இவர் விலகினார்.