அர்ஜுன் எரிகைசி, உலக சதுரங்க நிர்வாகக் குழுவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய FIDE தரவரிசையில் முன்னணி இடத்தில் உள்ள இந்தியர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றுள்ளார்.
அர்ஜுன் எரிகைசி உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், இந்த FIDE தர வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியர் ஆவார்.
இதில் ஆனந்தைத் தொடர்ந்து R. பிரக்ஞானந்தா, D. குகேஷ் மற்றும் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி ஆகிய மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.