17 வயதிற்குட்பட்டோருக்கான 2023 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை போட்டியினை நடத்துவதற்காக பெருவிற்கு வழங்கப்பட்ட உரிமையை FIFA திரும்பப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் அந்தப் போட்டியை நடத்த அந்நாடு தயாராக இல்லை.
இந்தப் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் டிசம்பர் 02 ஆம் தேதி வரை நடை பெற உள்ளன.
முன்னதாக, 20 வயதிற்குட்பட்டோருக்கான 2023 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்கான இந்தோனேசியாவின் உரிமத்தினையும் FIFA ரத்து செய்தது.
இஸ்ரேல் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணமாகும்.
மே 20 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மொத்தம் 24 அணிகள் இப்போட்டியில் பங்கு பெறத் திட்டமிடப் பட்டது.
இப்போட்டியில் பங்கு பெற இஸ்ரேல் முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
FIFA அமைப்பானது 2021 ஆம் ஆண்டுகளுக்குரியப் போட்டிகளை நடத்துவதற்குப் பெரு மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரண்டு நாடுகளையும் 2019 ஆம் ஆண்டில் தேர்ந்து எடுத்தது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளும் போட்டிகளை நடத்துவதைத் தாமதமாக்கியுள்ளன.