1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேல்ஸ் நாடு முதல் முறையாக FIFA உலகக் கோப்பையை எட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் FIFA உலகக் கோப்பை FIFA உலகக் கோப்பைப் போட்டியின் 22வது தொடராக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது கத்தாரில் முதன்முறையாக நடைபெற உள்ளது.
அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக் கோப்பை இதுவாகும்.
2002 ஆம் ஆண்டு தென் கொரியா மற்றும் ஜப்பானில் நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு, முழுமையாக ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது உலகக் கோப்பை இது ஆகும்.
கூடுதலாக, 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறும் போட்டியில் 48 அணிகள் பங்கேற்கும் நிலையில், 32 அணிகள் பங்கேற்கும் கடைசிப் போட்டியாகவும் இது இருக்கும்.
கத்தாரின் கடுமையானக் கோடை வெப்பம் காரணமாக, இந்த உலகக் கோப்பை நவம்பர் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை நடைபெறவுள்ளது.
இதனால் இதுவே மே, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறாத முதல் போட்டி ஆகும்.