நான்கு முறை வெற்றி பெற்ற மற்றும் ஐரோப்பியச் சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி அணியானது, தனது வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது தொடர் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியது.
வேல்ஸ் நாடானது, கடந்த 64 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ள நிலையில், ஒரு ஐரோப்பிய அணிக்கான, பெரிய அளவிலான இடைவெளி இதுவாகும்.
இதற்கு முன்னர் இந்த அணி 1958 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் மட்டுமே பங்கேற்றது.
முந்தைய உலகக் கோப்பைப் போட்டியை நடத்திய ரஷ்யா, உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக, இந்தப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற எகிப்து, பனாமா, கொலம்பியா, பெரு, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் 2022 ஆம் ஆண்டு போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
FIFA உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அறிமுகமான ஒரே அணி கத்தார் அணியாகும்.
1934 ஆம் ஆண்டில் இப்போட்டியை நடத்திய இத்தாலி நாட்டிற்குப் பிறகு போட்டியில் அறிமுகமாகி அப்போட்டியினை நடத்தும் முதல் நாடும் இதுவே ஆகும்.
இதன் விளைவாக, 2022 ஆம் ஆண்டு போட்டியானது தகுதி மூலம் இடம் பெற்ற எந்த ஒரு அணியும் முதல்முறையாக அறிமுகமாகாத முதல் உலகக் கோப்பைப் போட்டி ஆகும்.
நெதர்லாந்து, ஈக்வடார், கானா, கேமரூன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 2018 ஆம் ஆண்டு போட்டித் தொடரைத் தவற விட்டு மீண்டும் இந்த ஆண்டின் போட்டியில் இடம் பெற்றுள்ளன.
கனடா 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில், இது முன்னதாக 1986 ஆம் ஆண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்றிருந்தது.
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது.
அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற நாடு மற்றும் ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் பங்கு பெற்ற ஒரே நாடு பிரேசில் ஆகும்.
பிரேசில் அணி ஐந்து FIFA உலகக் கோப்பைப் பட்டங்களை வென்றுள்ளது.
நான்கு போட்டித் தொடர்களில் 16 கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸ், FIFA உலகக் கோப்பைப் போட்டிகளில் (2002, 2006, 2010, 2014) அதிக கோல்கள் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
அல் ரிஹ்லா என்பது நீர் சார்ந்த மைகள் மற்றும் பசைகள் மூலம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பைப் பந்து ஆகும்.
அல் ரிஹ்லா பந்தானது காலிறுதி போட்டி வரை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்தப்பட இருந்தது.
அல் ஹில்ம்' என்ற பந்தானது 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு அல் ரிஹ்லா பந்திற்குப் பதிலாக பயன்படுத்தப் பட்டது.
அல் ரிஹ்லா என்றால் ‘பயணம்’ என்ற 14 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் இபின் பதூதா எழுதிய பயணக் குறிப்பினைக் குறிக்கிறது.
உலக கால்பந்துகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான பந்துகளை பாகிஸ்தான் உற்பத்தி செய்கிற நிலையில் அதன் சியால்கோட் நகரம் இதற்கான உற்பத்தி மையமாக திகழ்கிறது.
லயீப் என்பது 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியின் அதிகாரப் பூர்வச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.