ஜப்பானின் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 2018ம் ஆண்டின் FIFA U-20 மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜப்பான் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தகாரடா சவோரி கோல் அடிக்க உதவி புரிந்தமைக்காகவும் தானே அடித்த கோல் காரணமாகவும் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் தகாரடாவுக்கு வெண்கல காலணி மற்றும் அடிடாஸ் சில்வர் பந்து வழங்கப்பட்டது. அதே வேளையில் மினாமி என்ற வீரருக்கு வெண்கல பந்து வழங்கப்பட்டது.
ஜப்பான் அணியானது ஃபேர்-ப்ளே (Fair-Play) விருதையும் பெற்றது. இத்துடன் FIFA U-20 உலகக் கோப்பை பிரான்ஸ் 2018 முடிவடைந்தது. இங்கிலாந்து அணியானது இதுவரைப் பெறாத நிலையான மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.