TNPSC Thervupettagam

FIFA U20 உலகக் கோப்பை 2023

June 18 , 2023 396 days 276 0
  • 2023 ஆம் ஆண்டு FIFA U20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உருகுவே அணியானது இத்தாலி அணியினை 1-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் பட்டத்தை வென்றது.
  • FIFA U-20 2023 உலகக் கோப்பைப் போட்டியானது அர்ஜென்டினாவில் உள்ள நான்கு நகரங்களில் நடத்தப் பட்டது.
  • செல்சியின் மிட்ஃபீல்டர் செசரே கசடே போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் (கோல்டன் பால்) மற்றும் கோல்டன் பூட் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றார்.
  • 1977 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் போட்டியானது முன்னதாக FIFA உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி என்று அறியப்பட்டது.
  • இந்தப் போட்டியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன.
  • 2023 ஆம் ஆண்டு போட்டியானது கோவிட் பெருந்தொற்று காரணமாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
  • இந்தப் போட்டியின் வரலாற்றில் அர்ஜென்டினா அதிக FIFA U20 உலகக் கோப்பை (6) பட்டங்களை  வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்