TNPSC Thervupettagam

FIFA உலகக் கோப்பை நடத்தும் நாடுகள்

April 11 , 2023 592 days 358 0
  • 17 வயதிற்குட்பட்டோருக்கான 2023 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை போட்டியினை நடத்துவதற்காக பெருவிற்கு வழங்கப்பட்ட உரிமையை FIFA திரும்பப் பெற்றுள்ளது.
  • இந்த ஆண்டின் இறுதியில் அந்தப் போட்டியை நடத்த அந்நாடு தயாராக இல்லை.
  • இந்தப் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் டிசம்பர் 02 ஆம் தேதி வரை நடை பெற உள்ளன.
  • முன்னதாக, 20 வயதிற்குட்பட்டோருக்கான 2023 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்கான இந்தோனேசியாவின் உரிமத்தினையும் FIFA ரத்து செய்தது.
  • இஸ்ரேல் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணமாகும்.
  • மே 20 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மொத்தம் 24 அணிகள் இப்போட்டியில் பங்கு பெறத் திட்டமிடப் பட்டது.
  • இப்போட்டியில் பங்கு பெற இஸ்ரேல் முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
  • FIFA அமைப்பானது 2021 ஆம் ஆண்டுகளுக்குரியப் போட்டிகளை நடத்துவதற்குப் பெரு மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரண்டு நாடுகளையும் 2019 ஆம் ஆண்டில் தேர்ந்து எடுத்தது.
  • கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளும் போட்டிகளை நடத்துவதைத் தாமதமாக்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்