கத்தாரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்சு அணியினை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையினை வென்றது.
1978 ஆம் ஆண்டில் முதன்முதலில் கோப்பையினையும், 1986 ஆம் ஆண்டில் இரண்டாவது சாம்பியன்ஷிப் பட்டத்தினையும் வென்ற அர்ஜென்டினா அணியானது மறைந்த டியாகோ மரடோனாவால் அளிக்கப் பட்ட ஒரு உத்வேகத்துடன் தனது அடுத்தக் கோப்பையினை வென்று உள்ளது.
ரஷ்யாவினால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியில் குரோஷியா அணியினை வீழ்த்தி பிரான்சு அணி கோப்பையினை வென்றது.
வெற்றி பெறும் அணிக்கு 42 மில்லியன் டாலர்கள் அல்லது 344 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 30 மில்லியன் டாலர்கள் அல்லது 245 கோடி ரூபாயும் வழங்கப் படும்.
ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயல்பட்ட வீரருக்கு தங்கப் பந்து விருது வழங்கப் படுகிறது.
தங்கக் கையுறை விருது மற்றும் கோல்டன் பூட் (தங்கக் காலணி) விருது ஆகியவை இந்த கௌரவ விருதுகளில் மிகவும் மதிப்பு மிக்கவையாகும்.
இந்தப் போட்டியின் போது அதிக கோல்கள் அடித்த வீரருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப் படுகிறது.