ஆண்டு முடிவில் வெளியிடப்படும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்கங்களுக்கான கூட்டமைப்பின் (FIFA- The Fédération Internationale de Football Association) உலகத் தரவரிசையில் பெல்ஜியம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸை விட 1 புள்ளி அதிகம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் பிரேசில் மூன்றாவது இடத்திலும் குரோஷியா நான்காவது இடத்திலும் இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
2018 ஆம் ஆண்டின் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ள அணியாக பிரான்ஸ் FIFA-வினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.