TNPSC Thervupettagam

FIFA கூட்டமைப்பின் சிறப்பு விருதுகள் 2024

December 26 , 2024 27 days 112 0
  • ரியல் மாட்ரிட் அணியின் பிரேசில் நாட்டினைச் சேர்ந்த விங்கர் வினிசியஸ் ஜூனியர் FIFA அமைப்பின் ஆடவருக்கான சிறந்த ஆட்டக்காரர் விருதினை வென்றுள்ளார்.
  • பார்சிலோனா எனும் அணியின் ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த மிட்ஃபீல்டர் ஐதானா பொன்மதி FIFA அமைப்பின் மகளிருக்கான சிறந்த ஆட்டக்காரர் விருதினை வென்று உள்ளார்.
  • மான்செஸ்டர் யுனைடெட் எனும் அணியின் இளம் வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ புஸ்காஸ் விருதைப் பெற்றுள்ளார்.
  • பிரேசிலின் மார்டா, இந்த ஆண்டு சர்வதேச பிரண்ட்லீஸ் என்ற போட்டியில் ஜமைக்கா அணிக்கு எதிராக கோலடித்ததற்காக முதலாவது ‘மார்டா’ விருதை வென்றுள்ளார்.
  • அர்ஜென்டினா நாட்டு அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் (ஆடவர் கோல்கீப்பர்) மற்றும் பிரிட்டிஷ் பயிற்சியாளர் எம்மா ஹேய்ஸ் (மகளிர் பயிற்சியாளர்) ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக அந்தந்தப் பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்