உலக நிர்வாக அமைப்பான FIFA ஆனது (International Federation of Association Football - சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றம்) தனது பிரச்சாரத்திற்காக இந்தியக் கால்பந்து அணித் தலைவரான சுனில் சேத்ரி மற்றும் பிற 28 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
சுனிலைத் தவிர, உலகெங்கிலும் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களான அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி மற்றும் இதர உலகக் கோப்பை வெற்றியாளர்களான கேசில்லாஸ், பிலிப் லஹம் மற்றும் கேல்ஸ் புயோல் ஆகியோரும் இதில் அடங்குவர்.
இந்தப் பிரச்சாரமானது கோவிட் – 19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக ஏற்படுத்தப் பட்டதாகும்.
இந்தப் பிரச்சாரமானது “கொரானா வைரஸை ஒழிப்பதற்கான செய்தியை அனுப்புதல்” என்று அழைக்கப் படுகின்றது.
இந்தப் பிரச்சாரமானது உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் 5 முக்கியமான நடவடிக்கைகளைக் கூறுகின்றது.
கை கழுவுதல், முகத்தைத் தொடாமல் இருத்தல், தும்மும் போது கைக்குட்டையைப் பயன்படுத்துதல், சமூக விலகல் மற்றும் வீட்டில் இருத்தல் ஆகியவை இதில் அடங்கும்.