- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Hockey Federation - FIH) வீரர்களுக்கான ஆண்டு விருதுகள் என்பது சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் சிறந்து விளையாடும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதுகளாகும்.
- FIH வீரர்களுக்கான ஆண்டு விருதுகளானது 1998 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டு, அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
- 2001 ஆம் ஆண்டில் அந்த ஆண்டிற்கான சிறந்த இளம் ஹாக்கி வீரர்களுக்கு விருது வழங்குவதற்காக FIH இளம் வீரர் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது.
- 1998 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு இந்திய ஹாக்கி வீரரும் இந்த விருதினைப் பெற்றதில்லை.
இந்த ஆண்டின் வெற்றியாளர்கள்
- ஆண்டின் ஆண் வீரர் – வன் டோரென் (பெல்ஜியம்). தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இவர் இந்த விருதைப் பெறுகிறார்.
- ஆண்டின் பெண் வீரர் – ஏவ டி கோடி (நெதர்லாந்து)
- ஆண்டின் கோல் கீப்பர்:
- ஆண் – வின்சென்ட் வனாஸ்ச் (பெல்ஜியம்)
- பெண் – மேடி ஹின்ச் (கிரேட் பிரிட்டன்)
- ஆண்டின் எழுச்சி வீரர்
- ஆண் – ஆர்தர் டி ஸ்லோவர் (பெல்ஜியம்)
- பெண் – லூசினா வின் டெர் ஹேடி (அர்ஜெண்டினா)