TNPSC Thervupettagam
March 8 , 2018 2454 days 917 0
  • இந்தியாவில் நிதியியல் தொழிற்நுட்பத்தின் (Fintech-Financial Technology) ஒழுங்குமுறைகள் மற்றும் அவற்றினுடைய   மேம்பாடு ஆகியவற்றை   ஆராய்வதற்காக மத்திய அரசு 8 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை (steering committee)  அமைத்துள்ளது.
  • பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs) செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • MSME துறைக்கு நிதியளிப்பதற்கு பயன்பாடுகளை (applications) உருவாக்க சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கில் (GSTN - Goods and Service Tax Network) உள்ள தரவுகள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் (credit information companies)  போன்ற தகவல் பயன்பாடுகளில்   உள்ள தரவுகளை     பயன்படுத்தும் முறைகள்.
    • பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய துறைகளில் அவற்றினுடைய பயன்பாட்டிற்காக எவ்வாறு நிதியியல் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

போன்றவவை தொடர்பான விவகாரங்களை ஆராய்வது இக்குழுவின் நோக்கமாகும்.

  • தொழில் நிறுவனங்களுக்கு தனிப்பட்ட நிறுவன அடையாள எண்ணை (unique enterprise identification number) உருவாக்கவும்  அவற்றை பயன்படுத்தவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) போன்ற நிறுவனங்களுடன் இக்குழு இணைந்து செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்