இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மூன்றாவது மன்றம் (FIPIC உச்ச மாநாடு) ஆனது போர்ட் மோர்ஸ்பி நகரில் நடைபெற்றது.
இது இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளால் இணைந்து நடத்தப் பட்டது.
FIPIC என்பது இந்தியாவிற்கும், சுமார் 14 பசிபிக் தீவு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான ஒரு பன்னாட்டுக் குழுவாகும்.
2015 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பில் (FICCI) FIPIC வர்த்தக அலுவலகம் உருவாக்கப்பட்டது.