இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR), "First in the World" என்ற புதியதொரு முன்னெடுப்பினை அறிவித்துள்ளது.
இது சிக்கலான உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதுமையான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கு இந்திய அறிவியலாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘அறிவு மேம்பாடு' அல்லது 'செயல்முறை சார் புத்தாக்கம்' ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முன்மொழிவுகள் இந்தத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படாது.