அரசாங்கம் ஆனது நவ் பாரத் சாக்சர்தா காரியக்ராம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 23 மாநிலங்களில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டுத் தேர்வை (FLNAT) மேற்கொண்டது.
இந்த மதிப்பீடானது - படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணியல் – என்ற மூன்று பாடங்களைக் கொண்டுள்ள நிலையில் அவை ஒவ்வொன்றிற்கும் 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
FLNAT ஆனது, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் திறன்களை மதிப்பிடச் செய்வதற்காக படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணியல் திறன்களை மதிப்பிடுகிறது.
ULLAS எனப் பிரபலமாக அறியப்படும் புதிய இந்திய எழுத்தறிவுத் திட்டம் ஆனது 2022-2027 ஆம் காலக் கட்டத்திற்கான மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டம் ஆகும்.
ULLAS சமூகத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்நாள் முழுவதுமான கற்றல் குறித்து புரிந்து கொள்தல் என்பதைக் குறிக்கிறது.