அகில இந்திய அளவில் அமைப்புசாரா தொழிற்துறைக்காக “நுண் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிற் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கான திட்டம் (FME - Formalization of Micro food processing Enterprises)” என்ற மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது
இது இலட்சிய நோக்கு மாவட்டங்களில் தற்பொழுது இருக்கும் நுண் உணவுப் பதப்படுத்தல் தொழில்முனைவோர்கள், மகளிர் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆகியோரால் வாங்கப்படும் கடன் அணுகுதலை அதிகரிக்க உதவுகின்றது.
இது தொகுப்பு ரீதியான ஒரு அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றது. இது அழுகிப் போகும் உணவுப் பொருட்கள் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
இது 5 ஆண்டு காலத்திற்கு, அதாவது 2020-21லிருந்து 2024-25 வரையிலான காலகட்டத்திற்குச் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
இது மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
இதற்கான செலவினமானது மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் 60 : 40 என்ற அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.