TNPSC Thervupettagam

FPI மற்றும் FDI ஆகியவற்றின் மறுவகைப்பாடு

November 16 , 2024 6 days 77 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்கள் தங்கள் பெரும் நிதி முதலீடுகளை அந்நிய நேரடி முதலீடாக (FDI) மாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பை இறுதி செய்துள்ளது.
  • எந்தவொரு அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்களின் (FPIs) முதலீடுகளும், ஓர் இந்திய நிறுவனத்தில் அதன் 10% அளவிலான பங்கு வரம்பை மீறும் தருணத்தில் அது அந்நிய நேரடி முதலீடு (FDI) என மறுவகைப்படுத்தப்படும்.
  • இது 2019 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மை (கடன் அல்லாத செயற் கருவிகள்) விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது.
  • தற்போது, அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்கள், அவர்களின் முதலீட்டாளர் குழுவுடன் (FPI) செய்யும் முதலீடு ஆனது, வர்த்தகத்திற்குள் ஈடுபடுத்தப் படுவதற்கு கிடைக்கப் பெறும் முழு பங்குகளின் அடிப்படையில் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • கட்டமைப்பின்படி, சம்பந்தப்பட்ட அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர் அரசாங்கத்திடம் இருந்து தேவையான முக்கிய ஒப்புதல்களையும், சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டு நிறுவனத்தின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
  • FDI என்பது இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் ஒருவரால் மூலதனச் செயற்கருவிகள் மூலம் செய்யப்படும் முதலீடு ஆகும்.
  • FPI என்பது பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதி சொத்துக்களில் மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முதலீடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்