தனியார் நிறுவனத்தின் பெரும் நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்பட்ட Fram2 மனித விண்வெளிப் பயணம் ஆனது, அதன் பயணத்தினை மிக வெற்றிகரமாக முடித்து அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கியது.
"ரெசிலியன்ஸ்" எனப்படும் விண்வெளி வீரர்களின் ஒரு பயணப் பெட்டகத்துடன் கூடிய இந்தக் கலமானது ஃபால்கன் 9 ஏவுகலம் மூலம் துருவ சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது.
இந்த ஆய்வுப் பயணத்திற்கு நான்கு விண்வெளி வீரர்கள் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவினர் வழி நடத்தினர்.
அவர்களின் நான்கு நாட்கள் அளவிலான பயணத்தின் போது, விண்வெளியில் மனித குலத்தின் நீண்ட கால நீடிப்புத் திறன்களை நன்கு மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 22 ஆராய்ச்சி ஆய்வுகளை அக்குழுவினர் நடத்தினர்.
இக்குழுவினர் விண்வெளியில் முதல் ஊடு கதிர் (X-Ray) ஆய்வினை மேற்கொண்டனர் என்ற நிலையில் இது நுண் ஈர்ப்பு விசையானது எலும்பு மற்றும் தசைகளின் மீதான அடர்த்தியை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவல்களை வழங்கியது.