TNPSC Thervupettagam
April 9 , 2025 11 days 68 0
  • தனியார் நிறுவனத்தின் பெரும் நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்பட்ட Fram2 மனித விண்வெளிப் பயணம் ஆனது, அதன் பயணத்தினை மிக வெற்றிகரமாக முடித்து அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கியது.
  • "ரெசிலியன்ஸ்" எனப்படும் விண்வெளி வீரர்களின் ஒரு பயணப் பெட்டகத்துடன் கூடிய இந்தக் கலமானது ஃபால்கன் 9 ஏவுகலம் மூலம் துருவ சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது.
  • இந்த ஆய்வுப் பயணத்திற்கு நான்கு விண்வெளி வீரர்கள் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவினர் வழி நடத்தினர்.
  • அவர்களின் நான்கு நாட்கள் அளவிலான பயணத்தின் போது, விண்வெளியில் மனித குலத்தின் நீண்ட கால நீடிப்புத் திறன்களை நன்கு மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 22 ஆராய்ச்சி ஆய்வுகளை அக்குழுவினர் நடத்தினர்.
  • இக்குழுவினர் விண்வெளியில் முதல் ஊடு கதிர் (X-Ray) ஆய்வினை மேற்கொண்டனர் என்ற நிலையில் இது நுண் ஈர்ப்பு விசையானது எலும்பு மற்றும் தசைகளின் மீதான அடர்த்தியை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவல்களை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்